Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் - போலீசில் புகார்!

02:20 PM Jan 04, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பாக  விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.  அவர் கடந்த சில வருடங்களாகவே சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்தார்.  அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.  சினிமா நட்சத்திரங்கள் நேரில் வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

அந்த வகையில்,  நடிகர் விஜய்,  விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேமுதிக அலுவலகம் சென்றார்.  அப்போது அங்கு விஜய் கூட்ட நெரிசலில் சிக்கினார். இதையடுத்து போலீஸார்,  அவரைப் பத்திரமாக மீட்டு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த அழைத்துச் சென்றனர்.  விஜயகாந்த் உடலைப் பார்த்து நடிகர் விஜய் கலங்கி நின்ற காட்சி காண்போரை கலங்கச் செய்தது.

பின்னர்,  பிரேமலதா மற்றும் விஜயகாந்தின் மகன்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து விஜய் புறப்பட்டார்.  நடிகர் விஜய் கிளம்பும்போது அங்கிருந்த விஜயகாந்த் ரசிகர்கள், “வெளியே போ, வெளியே போ” என விஜயைப் பார்த்து கோஷமிட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.  அப்போது ரசிகர்கள் சிலர் நடிகர் விஜய் மீது செருப்பு வீச முயற்சித்த சம்பவமும் நிகழ்ந்தது. விஜய்க்கு பின்புறமாக செருப்பு வீசப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி, வைரலானது.

நடிகர் விஜய்யை திரையுலகில் ஆரம்பகாலத்தில் தன் படங்களில் நடிக்க வைத்து பிரபலமாக்கியதே விஜயகாந்த் தான்.  ஆனால்,  அவர் உடல்நிலை குன்றியிருந்த போது ஒருமுறை கூட அவரைப் விஜய் பார்க்க வரவில்லை.  அந்த அதிருப்தியால் தான்,  ரசிகர்கள் கோஷமிட்டு,  தங்களது எதிர்ப்பைத் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில்,  கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பாக தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article