ஜம்மு காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை!
ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இதனை தொடர்ந்து உலக நாடுகள் சண்டையை நிறுத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானை வலியுறுத்தி வந்தன.
அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இருக்கும் பகுதியை சுற்றிவளைத்த போது துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைப்பெற்ற சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.