Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டிற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்! நாளை #PMModi காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்!

02:35 PM Aug 30, 2024 IST | Web Editor
Advertisement

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் & மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நாளை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதே போல் மீரட் - லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

Advertisement

நாளை டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வந்தே பாரத் ஸ்பெஷலின் தொடக்க சேவையின் அட்டவணை/நேரங்கள்:

ரயில் எண். 02627 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் தொடக்க சிறப்பு ரயில், நாளை டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 12.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் 21.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். ரயில் எண். 02627 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்களின் நிறுத்தங்கள் மற்றும் விரிவான நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வழியாக தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் சிறப்பு ரயிலின் கொடியேற்றும் நிகழ்வில்ச ரயில்வே மற்றும் ஜல்சக்தி துறை அமைச்சர் வி.சோமண்ணா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

இதையும் படியுங்கள் : ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது #TNPSC!

மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் பாரத் சிறப்புத் தொடக்க சேவையின் அட்டவணை:

20671 / 20672 என்ற மதுரை - பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகள் உடன் 6 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அவை திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகியவை ஆகும். வாரத்தில் செவ்வாய் கிழமை தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் இயக்கப்படும்.

Tags :
Bangalorechennai centralMaduraimodiNagarkovilPMOIndiaTamilNadutrainsVande Bharat Express
Advertisement
Next Article