For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
05:18 PM May 21, 2025 IST | Web Editor
விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு
Advertisement

விழுப்புரம் மாவட்டம் அரசூர் கிராமத்தில் செல்லும் மலட்டாற்றில் நீர் செல்வதால் அதே பகுதியை சார்ந்த சகோதரிகளான சிவசங்கரி (20) அபிநயா (15) மற்றும் ராஜேஷ் (15) கிரண் ஆகிய நான்கு பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் மணல் அள்ளப்பட்ட ஆழத்திற்கு சென்று குளித்துள்ளனர்.

Advertisement

அப்போது சிவசங்கரி, அபிநயா, ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் பள்ளத்தில் இறங்கியதால் நீரில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். இதையறிந்த சிறுவன் கிரண் கிராம மக்களை அழைத்து சென்று நீரில் மூழ்கியவர்களை மீட்க முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து ஆற்று நீரில் மூழ்கியவரக்ளை மீட்டு கிராம மக்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சார்ந்த சகோதரிகள் விடுமுறைக்கு வந்த சிறுவன் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement