Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தடுப்பணையில் குளிக்கச் சென்ற மூன்று +2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

09:26 PM Apr 24, 2024 IST | Web Editor
Advertisement

கோவையில் தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. கடும் வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக நீர்நிலைகளுக்கு சென்று பொதுமக்கள் குளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள முண்டந்துறை தடுப்பணையில் தற்போது 12 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் மொத்த உயரம் 40 அடி ஆகும். இங்கு இன்று மதியம் நான்கு மணி அளவில் பேரூர் அருகில் உள்ள தீத்திபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் பிரவீன் (17), தக்சன் (17), கவின் (16), ஆகியோருடன் சஞ்சய் (21) ஆகிய நான்கு பேர் குளிப்பதற்காக சென்றிருந்தனர். அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது நீச்சல் தெரியாத பிரவீன், கவின், தக்சன் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து சஞ்சய் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர், நீரில் மூழ்கிய மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காருண்யா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Damkovaischool StudentsWater
Advertisement
Next Article