Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த ஆயிரகணக்கான பக்தர்கள்!

09:41 AM Mar 24, 2024 IST | Web Editor
Advertisement

பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். 

Advertisement

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர
மகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் பங்குனி மாதம் பௌர்ணமியை  முன்னிட்டு 4 நாட்கள் மலையறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய
வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்தனர். இந்த நிலையில்
இன்று பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்
இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

தற்போது கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்து செல்கின்றனரா என வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை தீவிர பரிசோதனை ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடமிருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து அதன் பின்னர் மலையேறி செல்ல அனுமதி அளித்தனர்.

மலைப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி மலைப்
பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ளதால்
பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. சாமி தரிசனம் செய்து முடித்தவுடன் அடிபாரப் பகுதிக்கு இறங்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Tags :
BakthiDevteesFull moonSathuraggiri Sundara Mahalingam
Advertisement
Next Article