பீகாரில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசியவர்கள் முஸ்லிம்கள் அல்ல! - வைரலாகும் பதிவு பொய் என #FactCheckல் நிரூபணம்!
This news Fact Checked by 'AajTak'
பீகாரின் கயா நகரில் வந்தே பாரத் ரயிலில் கல் வீசியதற்காக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் என சமூக வலைதள்ங்களில் வைரலானது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
பீகாரின் கயா நகரில் வந்தே பாரத் ரயிலில் கல் வீசியதற்காக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் என சமூக வலைதள்ங்களில் படங்கள் வைரலானது. இப்படத்தில் இடம்பெற்றவர்களின் பெயர்கள் ஷாஹித் ஹுசைன் மற்றும் சல்மான் எனவும் சமூக வலைதள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவிட்ட ஒரு பயனர், ” வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியதற்காக ஷாஹித் ஹுசைன் மற்றும் சல்மான் கைது செய்யப்பட்டனர்” என்று எழுதியிருந்தார்.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலாகும் படங்கள் தொடர்பாக கூகுளில் முக்கிய வார்த்தைகளை பயன்படுத்திய தேடியபோது நவம்பர் 22, 2024 தேதியிட்ட ரயில்வே அமைச்சகத்தின் ட்வீட்டில் இந்தப் படத்தைக் கண்டோம் . கயாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீசிய இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ், “ஷாஹித் ஹுசைன் மற்றும் சல்மான்” என்று எழுதினார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த பதிவு இந்த ட்வீட் மூலம் தொடங்கியிருக்கலாம்.
இச்சம்பவம் குறித்து பல செய்திகள் வெளியானதைக் கண்டோம் . கயாவின் மன்பூர் ரயில்வே பிரிவில் இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் 2 பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளது. இந்த அறிக்கைகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் மன்பூரில் வசிக்கும் விகாஸ் குமார் மற்றும் மணீஷ் குமார் என எழுதப்பட்டுள்ளது. ரயிலுக்காக மணிக்கணக்கில் காத்திருந்த இருவரும் தண்டவாளத்தில் அமர்ந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தவுடன் கற்களை வீசி தாக்கினர்.
நவம்பர் 16, 2024 அன்று, மான்பூர் ரயில்வே பிரிவு சென்ட்ரல் அருகே பாட்னா-டாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் கயா-ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு நடந்ததாக ட்வீட் மூலம் புகார் அளிக்கப்பட்டது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த சம்பவத்தில் ரயிலின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், ஆர்பிஎப் தனிப்படை அமைத்து, சம்பவம் நடந்த இடம் அருகே அதிரடி சோதனை நடத்தி, கற்களை வீசிய இருவரையும் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கடந்தகால்ங்களில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர், மேலும் அவர்கள் மற்ற ரயில்களையும் குறிவைக்க திட்டமிட்டதாகக் கூறினார். ரயில்வே பாதுகாப்புப் படை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் நவம்பர் 23, 2024 அன்று ஒரு செய்தித்தாள் குறிப்பை ட்வீட் செய்துள்ளது . அதே தகவலில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் விகாஸ் குமார் மற்றும் மணீஷ் குமார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்துள்ள ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், மணீஷ் குமாரின் தந்தையின் பெயர் சூரஜ் பிரசாத் என்றும், விகாஸ் குமாரின் தந்தையின் பெயர் சோட்டான் பாஸ்வான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களை உறுதிப்படுத்த ரயில்வே வாரிய செயல் இயக்குனர் திலீப்குமாரையும் தொடர்பு கொண்டோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகள் மட்டுமே உள்ளனர் என்றும், இருவரும் இந்துக்கள் என்றும் அவர் ஆஜ் தக்கிடம் உறுதிப்படுத்தினார்.
முடிவு:
பீகாரின் கயா நகரில் வந்தே பாரத் ரயிலில் கல் வீசியதற்காக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் என சமூக வலைதள்ங்களில் வைரலானது. உண்மை சரிபார்ப்பில் அவர்கள் இருவரும் முஸ்லிம்கள் அல்ல இந்துக்கள் என்பது உறுதியானது. இந்தப் படம் தவறாக பரப்பப்படுகிறது.
Note : This story was originally published by 'AajTak' and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.