Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்” - கனிமொழி எம்பி!

09:27 AM Jan 10, 2025 IST | Web Editor
Advertisement

“சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்” என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். 

Advertisement

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பலரும் சீமான் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும், பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில் பெரியார் குறித்து  பேசியவர்களுக்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;

“பகுத்தறிவு - சமத்துவம் - பெண் விடுதலை - அறிவியல் வளர்ச்சி - தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
AnnamalaiDMKKanimozhi MPNTKSeeman
Advertisement
Next Article