For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“திணிக்கப்படாத வரை இந்தியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்!” - கவிப்பேரரசு வைரமுத்து

04:18 PM Jan 16, 2024 IST | Web Editor
“திணிக்கப்படாத வரை இந்தியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள் ”   கவிப்பேரரசு வைரமுத்து
Advertisement

இந்தி மொழி திணிக்கப்படாத வரை அம்மொழியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள் என கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார்.

Advertisement

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள சென்னை
மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிப்பேரரசு வைரமுத்து
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து பேசியதாவது:

ஆண்டுக்கு ஆண்டு திருவள்ளுவர் திருநாளுக்கு பெருகி வரும் ஆதரவு திருவள்ளுவரின்
செல்வாக்கு பெருகுவதை காட்டுகிறது. திருவள்ளுவர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். கடந்த வாரம் அதிகம் பேசப்பட்ட இரு மொழி கொள்கை குறித்து பேச வேண்டும். திருக்குறளை படிக்கும்போது நாங்கள் தமிழையே படிக்கிறோம். மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி
மொழி திணிப்பை வேண்டாம் என்கிறோம்.

இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள். இங்கிருந்து வட மாநிலத்திற்கு செல்வர்கள் இந்தியை கற்றுக் கொள்கிறார்கள். அங்கிருந்து இக்கு தொழிலுக்காக வருபவர்கள் தமிழை கற்றுக் கொள்கிறார்கள். மூன்றாவது மொழி என்பது சூழலால் வருவது. தாய்மொழி பண்பாட்டு மொழி. ஆங்கிலம் நாகரிக மொழி. ஒரு மனிதன் பண்பாட்டுடன் நாகரிகத்துடன் திகழ தமிழ், ஆங்கிலம் போதும். *இந்தி மொழி மீது அச்சம் உள்ளது. வட மொழி கலக்கும் போதெல்லாம் தமிழ் கலப்படம் ஆகிறது.

எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ, அதுபோல் வடமொழி நிலத்தை
அரித்து விட்டது. அப்படி நாங்கள் அதிகம் இழந்திருக்கிறோம். இனியும் எங்கள் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க தயாராக இல்லை. இந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை. அச்சம் உள்ளது. இந்த நியாயமான அச்சத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை கொடுக்காமல் பாதுகாப்பை
கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். திருக்குறளை நாள்தோறும் தமிழர்கள் தங்கள் வீடுகளில் ஓத வேண்டும்‌.

இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து கூறினார்.

Tags :
Advertisement