For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

''கோவையில் மகளிர் உரிமை தொகை வராதவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம்''- மாவட்ட ஆட்சியர்!

04:12 PM Nov 01, 2023 IST | Student Reporter
  கோவையில் மகளிர் உரிமை தொகை வராதவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம்    மாவட்ட ஆட்சியர்
Advertisement

கோவையில்  மகளிர் உரிமை தொகை கிடைக்கப் பெறாதவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை,  சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியூர் ஊராட்சியில்
உள்ளாட்சி தின விழாவையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம்
தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.  இதில் மாவட்ட ஆட்சியர் கிரந்தி
குமார் பாடி சிறப்பு மேற்பார்வையாளராக கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் கணியூர் ஊராட்சி சார்பில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊராட்சியில் சிறப்பாக செயலாற்றிய தூய்மை காவலர்களை மாவட்ட ஆட்சியர்
கௌரவித்தார்.  அப்போது முன்கள பணியாளர்கள் சிலர் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை
தொகை வரவில்லை என முறையிட்டனர்.  அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு
ஆயிரம் ரூபாய் கிடைக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என ஆட்சியர் உறுதி
அளித்தார்.

இதையும் படியுங்கள்:“2026-ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவதே அதிமுகவின் இலக்கு” – திண்டுக்கல் சீனிவாசன்

பின்னர் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி
பேசியதாவது:

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திட்டங்கள்
வழங்கப்பட்டு வருகிறது.  தற்போது கிராமங்களுக்கான திட்டங்கள் அதிகரித்துள்ளது.
அதேவேளை அதற்கான சவால்கள் அதிகமாக உள்ளன.

குறிப்பாக கூட்டு குடிநீர் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.  நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க மழைநீர் சேமிப்பு திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.  தனியார் கட்டடமாக இருந்தாலும் அரசு கட்டடமாக இருந்தாலும் நிலத்தடி நீரை சேமிக்க அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

திடக்கழிவு மேலாண்மை பொருத்தமட்டில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்க உள்ளாட்சி அமைப்புகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  விவசாயிகள் கண்டிப்பாக கிசான் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் பயிர் கடன் வாங்குவதற்கான பல்வேறு பயன்கள் இருந்து வருகிறது.  ரூ.60,000 வரை எந்தவிதமான அடமானம் இல்லாமல் கடன் பெறுவதற்கான வசதி கிசான் திட்டத்தில் உள்ளது என தெரிவித்தார்.

மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வி.பி.கந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement