For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலகக்கோப்பை வெற்றிக்கு அந்த 3 தூண்கள் தான் காரணம்...ரோகித் சர்மா கூறியது யாரை?

01:27 PM Aug 22, 2024 IST | Web Editor
உலகக்கோப்பை வெற்றிக்கு அந்த 3 தூண்கள் தான் காரணம்   ரோகித் சர்மா கூறியது யாரை
Advertisement

“ஜெய் ஷா, ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் ஆகிய 3 தூண்களிடமிருந்து எனக்கு நிறைய உதவி கிடைத்தது” என உலகக்கோப்பை வெற்றிக்குறித்து ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 

Advertisement

ஐசிசி 2024 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்ற சாதனை படைத்தது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற அத்தொடரில் தோல்வியை சந்திக்காமல் இந்தியா வெற்றி பெற்றது. குறிப்பாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருதுகள் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவுக்கு ஆடவருக்கான சர்வதேச கிரிக்கெட்டர் விருது வழங்கப்பட்டது. யஜஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சிறந்த டெஸ்ட் பேட்டர் விருதும், முகமது ஷமிக்கு சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர் விருதும், இந்தாண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது.

இந்த விருதுக்கும் பின் ரோகித் சர்மா பேசியதாவது;

“சாதனைகள், முடிவுகள் போன்றவற்றை கவலைப்படாத அணியாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய கனவாகும். எதைப் பற்றியும் அதிகமாக சிந்திக்காமல் களத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்ற சூழ்நிலை அணியில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதுவே எங்களுக்கு தேவைப்பட்டது. அதற்காக ஜெய் ஷா, ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் ஆகிய 3 தூண்களிடமிருந்து எனக்கு நிறைய உதவி கிடைத்தது.

அதுவே நான் செய்த விஷயங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. அதே சமயத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் வந்து இந்திய அணி சாதனை படைக்க உதவிய வீரர்களையும் மறந்து விடக்கூடாது. நான் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதற்கு காரணம் இருந்தது. ஒருமுறை நீங்கள் போட்டிகளையும், கோப்பைகளையும் வென்று ருசி பார்த்து விட்டால் அதன் பின் நிற்க விரும்ப மாட்டீர்கள். எனவே எங்களைத் தொடர்ந்து தள்ளி வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம்” என்று கூறினார்.

Tags :
Advertisement