For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Thoothukudi பெரிய கோயில் சனி பிரதோஷம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

08:48 PM Aug 17, 2024 IST | Web Editor
 thoothukudi பெரிய கோயில் சனி பிரதோஷம்   திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Advertisement

ஆவணி மாத வளர்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு தூத்துக்குடியில்
உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement

பிரதோஷ தினத்தன்று சிவாலயம் சென்று வழிபட்டால் நற்பலன்ங்கள் கிடைக்கும் என்பது
ஐதீகம். அதிலும் குறிப்பாக சனிக்கிழமை வரும் பிரதோஷ தினம் வெகு சிறப்பு வாய்ந்ததாகும். இன்று ஆவணி மாத முதல் வளர்பிறை பிரதோஷம் சனி பிரதோஷமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர
ராமேஸ்வரர் ஆலயத்தில் மாலை 4 மணி முதல் நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு பால்,
தயிர், இளநீர், பழங்கள், சந்தனம், விபூதி, உள்ளிட்ட 16 வகையான வாசனை
திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மலர்களால்
அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதையும் படியுங்கள் :“குழந்தைப் பேறு கிடைப்பதில் கடவுளின் அருள் எதுவுமில்லை” - மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் #AjitPawar!

முன்னதாக சாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்தை சுற்றி
வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்
நமச்சிவாய என்று பக்தி முழக்கமிட்டபடி வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags :
Advertisement