தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதன் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்ததை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ’நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம்’ அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியது. மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு வருகிற நவம்பர் 17ல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.