Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீவுகளான கிராமங்கள் - மீட்புப் பணிகளில் அலட்சியம் என பொதுமக்கள் வேதனை!

03:03 PM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் குறைவாகவே நடைபெறுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும், போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருப்புப் பாதைகள் சேதங்களினாலும் தென்மாவட்டங்களில் ரயில்வே அனைத்தும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி,  திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு  தீவிரமாக உள்ளதால் பல பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் குறைவாக நடைபெறுவதாகவும், உதவி தேவைப்படும் பகுதிகளுக்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள மீட்புக்குழுவினரை அனுப்புவதில் அலட்சியம் காட்டுவதாகவும் அரசு அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்ற விடுக்கும் கோரிக்கைகள் புறக்கணிப்பதாக குற்றச்சாடு எழுந்துள்ளது. 

Tags :
Heavy rainfallheavy rainsKanyakumari RainsNellai FloodsNews7Tamilnews7TamilUpdatesrainfallSouth TN RainsTamilnadu RainsTenkasi RainsThoothukudiThoothukudi Rains
Advertisement
Next Article