நடப்பாண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 7% இருக்கும் - #WorldBank!
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என முந்தைய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது 7 சதவீதத்தை எட்டும் என உலக வங்கி உயர்த்தி மதிப்பிட்டுள்ளது.
தொழில்துறையில் ஒரு சிறிய மந்தநிலை ஏற்பட்டாலும், விவசாயத்தின் மீட்சி இதை சமநிலைப்படுத்த உதவும் எனவும், மேலும் சேவைத் துறை தொடர்ந்து சிறப்பாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் எதிர்பார்க்கப்படும் மறுமலர்ச்சியின் காரணமாக, கிராமப்புற தனியார் நுகர்வு அதிகரிக்கும்.
அடுத்த 2 நிதியாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக 6.7% என்ற அளவில் வலுவாக இருக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. தனியார் முதலீடு படிப்படியாக நுகர்வு மீட்புக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதார சரிவிற்கு வேலைவாய்ப்பின்மை முக்கிய காரணமாக உள்ளது. நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் சராசரியாக 17% என்ற அளவில் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.