For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இவரின் பேட்டிங் வெறுப்பூட்டியது" - தோல்வி குறித்து பேசிய கேன் வில்லியம்சன்!

12:41 PM Jun 13, 2024 IST | Web Editor
 இவரின் பேட்டிங் வெறுப்பூட்டியது    தோல்வி குறித்து பேசிய கேன் வில்லியம்சன்
Advertisement

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனையடுத்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தோல்வி குறித்து  பேசியுள்ளார். 

Advertisement

ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் இன்று நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் மோதின.  இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 76 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்தது.  தொடர்ந்து அந்த அணியின் ரூதர்போர்ட் 39 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.  இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.  அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 40 ரன்களும் பின் ஆலன் 26 ரன்களும் எடுத்தனர்.  அதன்படி,  வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், இந்தப் போட்டியின் தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது,  "எங்களுடைய பந்து வீச்சு இந்த ஆடுகளம் எப்படி பட்டதென எதிரணிக்கு குறிப்பு தெரிவிக்கும்படி இருந்தது.  இந்தப் போட்டியில் ஒரே வித்தியாசம் ரூதர்போர்ட்டின் பேட்டிங் மட்டுமே.  அவரது பேட்டிங் எங்களுக்கு வெறுப்பூட்டும்படியாக இருந்தது.  வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் பலம் அவர்களுக்கு உபயோகமாக இருந்தது.

நாங்கள் அதிரடியாக விக்கெட்டுகள் எடுத்தோம்.  இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் சிறிய வித்தியாசங்கள்தான் போட்டியை மாற்றும்.  இன்று அது எங்களுக்கானதாக அமையவில்லை.   அவர்மீது இருந்த முழு நம்பிக்கையினால் கடைசி ஓவரை சான்ட்னருக்கு கொடுத்தோம் .  முதல் 12 ஓவர்கள் எங்கள் அணி பௌலர்கள் சிறப்பாகவே வீசினார்கள்.

முன்பே சொன்னதுபோல 3 பந்துகள்கூட ஆட்டத்தின் போக்கினையே மாற்றிவிடும்.  10-15 ரன்கள்கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.  மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.  2 நாள்களில் அடுத்த போட்டி இருக்கிறது.  சாமர்தியமாக இருக்க வேண்டும். இதையெல்லாம் பாடமாக எடுத்துக்கொண்டு நாங்கள் முன்னோக்கி செல்ல விரும்புகிறோம்" என்றார்.

Tags :
Advertisement