"நினைவு தெரிந்த நாளிலிருந்து இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை" - எஸ்.பி வேலுமணி பேட்டி!
கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கரூர் சம்பவத்தில் 39 பேர் இறந்ததாக தகவல்கள் வருகின்றன. எங்களுக்கெல்லாம் நினைவு தெரிந்த நாளிலிருந்து இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது இல்லை.
இது மிகவும் வருத்தமான ஒன்று. மோசமான துக்கமான சம்பவம், கரூரில் நடந்த சம்பவம் பற்றி வார்த்தைகளே வரவில்லை. பிரச்சாரத்திற்கு வரக்கூடிய தலைவர்கள் காவல்துறையும் சரியான முறையில் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். இது பற்றி முழுமையான தகவல்கள் தெரிகின்ற பொழுது விரிவாக அது பற்றி பொதுச்செயலாளர் கருத்தை தெரிவிப்பார். தற்போது மிக மோசமான சூழ்நிலையில் கரூர் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையும் அதிகமான அளவில் வழங்கி அரசு வேலை தர வேண்டும். இது போன்ற சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்ல இனி எங்கும் இதுபோன்று நடக்கக்கூடாது. அதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார்.