Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இது போராட்டத்தின் வெற்றி; நாடு என் மீது வைத்துள்ள அன்பையும், நம்பிக்கையையும் காப்பாற்றுவேன்!” - வினேஷ் போகத்

03:48 PM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் வென்ற முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனக்கு கிடைத்திருப்பது போராட்டத்தின் வெற்றி எனக் கூறியுள்ளார்.

Advertisement

ஹரியாணாவில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த அக். 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று (அக்.8) காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றார்.

பாஜகவின் யோகேஷ் குமாரைவிட 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். இதன்படி, வினேஷ் போகத் 65,080 வாக்குகளும், யோகேஷ் குமார் 59,065 வாக்குகளும் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் சுரேந்தர் 10,158 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஆம் ஆத்மியின் கவிதா ராணி 1,280 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

இந்த வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வினேஷ் போகத், இது ஒரு பெண்ணின் போராட்டம். போராட்ட பாதையை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த வெற்றி உரித்தானது. இது போராட்டத்தின் வெற்றி. இந்த நாடு என் மீது வைத்துள்ள அன்பையும், நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் என்று தெரிவித்தார்.

Tags :
haryanaHaryana Election ResultsHaryana electionsIndiaJulanandanews7 tamilResults With News7 TamilVinesh Phogat
Advertisement
Next Article