Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்..!

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
09:11 PM Oct 01, 2025 IST | Web Editor
தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
Advertisement

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

“கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 தமிழர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலக்குழிகளில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்பொழுது ஓயும் எனத் தெரியவில்லை.

தூய்மைப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதிலும் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும் மாநில அரசுகள் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும் என இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும், கேரளாவில் பாதிக்கப்பட்ட அக்குடும்பங்களுக்குத் தமிழக அரசின் சார்பாக முடிந்த உதவிகளை செய்து கொடுக்குமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
#SanitaryworkeridukkitamilslatestNewsNainarNagenthiranTNBJP
Advertisement
Next Article