Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தங்கம் வாங்க இது சரியான நேரமா? சவரனுக்கு ரூ.560 குறைவு!

10:28 AM Aug 06, 2024 IST | Web Editor
Advertisement

22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,400-ஆக விற்பனையாகிறது.

Advertisement

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3000க்கும் மேல் தங்கம் விலை குறைந்து வந்தது.

பின்னர் மீண்டும் உயர தொடங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று தங்கம் உயர்ந்த விலையில் இன்று விலை குறைந்துள்ளது.  நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.51,760-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,470-க்கு விற்பனையானது.

இன்றைய (ஆகஸ்ட் 06) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.51,200-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,400-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,855-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.54,840-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை நான்கு ரூபாய் குறைந்து கிராம் வெள்ளி ரூ.87.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
ChennaiGoldgold priceGold ratesilverToday Gold Price
Advertisement
Next Article