Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"படத்திற்கு 'இட்லி கடை' என பெயர் வைக்க இதுதான் காரணம்" - நடிகர் தனுஷ் விளக்கம்!

படத்திற்கு 'இட்லி கடை' என பெயர் வைத்தது ஏன்? என நடிகர் தனுஷ் விளக்கமளித்துள்ளார்.
12:55 PM Sep 15, 2025 IST | Web Editor
படத்திற்கு 'இட்லி கடை' என பெயர் வைத்தது ஏன்? என நடிகர் தனுஷ் விளக்கமளித்துள்ளார்.
Advertisement

தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'இட்லி கடை'. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு சென்னை நேரு மைதானத்தில் நேற்று (செப்.15) நடைபெற்றது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய தனுஷ், படத்திற்கு 'இட்லி கடை' என பெயர் வைக்க என்ன காரணம் என்பதை பகிர்ந்தார்.

அவர் இதுகுறித்து கூறியதாவது,

''எங்கள் கிராமத்திலும், சென்னையிலும் நான் சந்தித்த மற்றும் என்னைப் பாதித்த கதாபாத்திரங்களை வைத்து கற்பனையாக உருவாக்கியதுதான் இந்த 'இட்லி கடை'. இன்னும் பவர்புல்லான டைட்டில் வைத்திருக்கலாமே என்று கேட்கலாம். ஒரு சில படத்தில் ஹீரோ பெயரையே டைட்டிலாக வைப்பார்கள். இந்தப் படத்திற்கு இட்லி கடைதான் ஹீரோ. அதனால்தான் இப்படத்திற்கு இட்லி கடை என பெயர் வைத்துள்ளோம்" என்றார்.

Tags :
DhanushGV PrakashIdli KadaiIdli Kadai Audio LaunchmovieNithya Menontamil cinema
Advertisement
Next Article