Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசியலிலிருந்து விலக இதுதான் காரணம்...! -அம்பத்தி ராயுடு விளக்கம்..

09:57 PM Jan 07, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்த ஒரே வாரத்தில் விலகியதற்கான காரணத்தை அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

Advertisement

மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் நட்சத்திர வீரராக விளங்கிய அம்பத்தி ராயுடு அண்மையில் அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு அரசியலில் ஈடுபடுவது குறித்து சில காலங்களாக கூறிவந்தார். அதுபோலவே, ஆந்திராவில் ஆளுங்கட்சியாக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் இணைந்தார்.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்களே உள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் பேசப்பட்ட நிலையில், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்த அடுத்த கட்ட நடவடிக்கையை உரிய நேரத்தில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கட்சியில் இருந்து விலகியதற்கான காரணத்தை அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

துபாயில் வரும் 20ம் தேதி தொடங்க உள்ள சர்வதேச லீக் டி20 (ஐ.எல்.டி20) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாட உள்ளேன். தொழில்முறை விளையாட்டை விளையாடும் போது அந்த வீரருக்கு எந்த வித அரசியல் கட்சி சார்பும் இருக்கக்கூடாது என்பது விதி. இதனால்தான் அரசியலில் இருந்து விலகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article