Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இதுவே கடைசி முயற்சி" - பயிற்சி மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த #MamataBanerjee!

03:45 PM Sep 16, 2024 IST | Web Editor
Advertisement

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி 5-வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி, கொல்கத்தா நகரில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் பணிக்கு திரும்பவில்லை.

மருத்துவர்களின் போராட்டம் 35 நாட்களுக்கு மேலாக தொடரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சுகாதார நலன் சார்ந்த சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மருத்துவர்களை சமாதானம் செய்து பணிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் மருத்துவர்கள் போராடும் இடத்துக்கே சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "இதுவே என்னுடைய கடைசி முயற்சி" என்று தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், மேற்கு வங்க அரசு 5-வது முறையாக இன்று மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணியளவில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது, என்றும் ஆனால் பேச்சுவார்த்தையில் பேசப்பட்டது குறித்து பதிவு செய்யப்பட்டு இரு தரப்பினரின் ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பேச்சுவார்த்தைக்குச் செல்வது குறித்து மருத்துவர்கள் கலந்தாலோசித்து வருவதாக தெரிகிறது.

Tags :
Doctors ProtestKolkataKolkata Doctor CaseMamata banerjeenews7 tamilWest bengal
Advertisement
Next Article