Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘இதுவே கடைசி வாய்ப்பு...’ இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

07:49 PM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement

போர்நிறுத்தம் தொடர்பாக காசாவில் இந்த வாரம் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

Advertisement

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே மார்ச் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் ஏப்ரல் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது. இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் நிகழ்த்தி வருகிறது.  வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனிடையே காசாவில் போர்நிறுத்தம் கொண்டுவர கடந்த வாரம் கத்தாரில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் உடன்பாடு எட்டப்படாமல் அந்த பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிவுற்றது. இந்நிலையில் போர்நிறுத்தம் தொடர்பாக மீண்டும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. காசாவில் நடைபெறும் போர் மத்திய கிழக்குப் பகுதிகளின் பிற பகுதிகளுக்கும் விரிவடையும் பேராபத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தத்தை மேற்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான தருணம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நெருக்கத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க உள்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் 9-ஆவது முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று (ஆக. 19) இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில், அந்நாட்டின் அதிபர் ஐசாக் ஹர்ஸோக் உடன் அவர் பேச்சுவர்த்தையில் ஈடுபட்டார். அப்போது, காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட இதுவே கடைசி வாய்ப்பு என்ற எச்சரிக்கையை இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் அமெரிக்க தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது.

“பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களை தாயகம் அழைத்து வரவும், போர்நிறுத்தம் ஏற்படுத்திடவும், அமைதியும் பாதுகாப்பும் நிலைத்திடும் வகையில் ஒவ்வொருவரையும் சிறந்த பாதையில் நிலைநிறுத்திடவும் இதுவே ஒரு மிகச்சிறந்த தருணம்” என்று ஆண்டனி பிளிங்கன் பேசியுள்ளார்.

Tags :
AmericaHamasIsraelPalestinewar
Advertisement
Next Article