For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகாரில் மேலும் ஒரு பாலம் சரிந்து விழுந்தது! 15 நாட்களில் 10-வது சம்பவம்!

01:53 PM Jul 04, 2024 IST | Web Editor
பீகாரில் மேலும் ஒரு பாலம் சரிந்து விழுந்தது  15 நாட்களில் 10 வது சம்பவம்
Advertisement

பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில் கடந்த 15 நாட்களில் 10-வது சம்பவம் இது என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Advertisement

பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. பீகாரில் பாலங்கள் தொடர்ந்து விழுந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கடைசியாக நடந்த சம்பவம் சரண் மாவட்டத்தில் நேரிட்டுள்ளது. அதன்படி,  சரண் மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இந்நிலையில், கடந்த 15 நாட்களில் பிகாரில் இடிந்து விழுந்த 10-வது பாலம் என்று அறியப்படுகிறது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. சாப்ரா மாவட்டத்தில் இருந்த பழமையான பாலம் ஒன்று பலத்த மழைநீரால் இடிந்துள்ளது. இதனால் பல கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் இடிந்து விழுந்த 10வது பாலமாகும்.

இதையும் படியுங்கள் : நீங்கள் நலமா? திட்டம் – பயனாளிகளை வீடியோ காலில் தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பீகாரில் கடந்த சில ஆண்டுகளாகவே, பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வு தொடா்கதையாகியுள்ளது. தரமற்ற கட்டுமானம், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக அந்த மாநில பொதுப் பணித் துறை மீது மக்கள் குற்றம்சாட்டி வந்துள்ளனர். இந்நிலையில்,  பீகாரில் கடந்த 15 நாள்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்தது அதிர்ச்சியளிக்கிறது.

Tags :
Advertisement