"இது support இல்ல pure love" - 'மாமன்' படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு குறித்து நடிகர் சூரி உருக்கம்!
காமெடியனாக தனது கரியரை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர்தான் நடிகர் சூரி. இவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வெண்ணிலா கபடிகுழு உள்ளிட்ட பல படங்களில் காமெடியான நடித்துள்ளார். குறிப்பாக சிவகார்த்திகேயன், சூரி இணைந்து நடித்த படங்கள் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது. தற்போது சூரி ஹீரோவாக நடித்து வரும் சூழலிலும் எப்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காமெடியனாக நடித்து வந்த சூரி வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, ‘கருடன்’ படத்தில் இவரின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டனர். அந்த அளவிற்கு நடிப்பில் கலக்கி இருந்தார். இனிமேல், ஹீரோவாக மட்டுமே நடிங்கள் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து, ‘கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் கடந்த மே 16ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் சூரி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் சூரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"என் அன்பான சகோதர, சகோதரிகளும், நீங்க குடுத்த அன்பும் நம்பிக்கையும் தான் — நான் சம்பாதிச்ச பெரிய பொக்கிஷம். மாமன் படத்துக்கு நீங்க குடுத்த ஒவ்வொரு like, comment, share-ம் எனக்கு சொல்ல முடியாத motivation-ஆ இருக்கு! உண்மையிலே இது support இல்ல, இது உங்க pure love தான்!”
இவ்வாறு நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.