Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல” - ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!

போர் பதற்றம் காரணமாக ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
01:25 PM May 09, 2025 IST | Web Editor
போர் பதற்றம் காரணமாக ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement

மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘தக் லைஃப்’. ராஜ்கமல்,  மெட்ராஸ் டாக்கீஸ்  ஆகிய நிறுவங்கள் தயாரிக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisement

ரீலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழு வருகிற மே 16 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணாமாக  இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதியை மாற்றியமைக்க முடிவெடுத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டு எல்லையில் நடந்து வரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, மே 16 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவை மீண்டும் திட்டமிட முடிவு செய்துள்ளோம்.

நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதில் நமது வீரர்கள் தளராத துணிச்சலுடன் முன்னணியில் நிற்கும் நிலையில், இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, அமைதியான ஒற்றுமைக்கான நேரம் என்று நம்புகிறோம். புதிய தேதி பின்னர், மிகவும் பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும்.

இந்த நேரத்தில், நமது நாட்டைப் பாதுகாக்க விழிப்புடன் நிற்கும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றி எங்கள் எண்ணங்கள் உள்ளன. குடிமக்களாக, நிதானத்துடனும் ஒற்றுமையுடனும் செயல்படுவது நமது கடமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Indian ArmyKamal haasanMani RatnamstrThug LifeWar Tension
Advertisement
Next Article