For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே"… டிரம்பிடம் #Vidaamuyarchi அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்!

07:46 PM Oct 04, 2024 IST | Web Editor
 இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே … டிரம்பிடம்  vidaamuyarchi அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்
Advertisement

அஜித் ரசிகர் ஒருவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர்.  இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது.

சுமார் 30 நாட்களுக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்தாக ஜூலை 22ம் தேதி படக்குழு அறிவித்தது.  இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது.  அதில் நடிகர் அஜித் உட்பட படக்குழுவினர் இடம்பெற்றிருந்தனர். இப்படத்தில் நடித்துள்ள அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோரின் தோற்ற போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், சமீப நாட்களாக விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

இந்த சூழலில், அஜித் ரசிகர் ஒருவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதன்படி, அவர் "விடாமுயற்சி ரிலீஸ் தேதி அப்டேட் கொடுத்தால் நானும், என் நண்பர்களும் மதுரையில் இருந்து வந்து உங்களுக்கு ஓட்டு போடுவோம் டிரம்ப்" என வருத்தப்படாத வாலிபர் சங்க பட வீடியோவுடன் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவிற்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் டீம் ஆட்டமேட்டிக் மெசேஜ் அனுப்பியுள்ளது. அதில் "வடக்கு கரோலினா பற்றி முக்கிய தேர்தல் அப்டேட்டுகளை அனுப்பி வைக்கிறேன். நவம்பர் 5ம் தேதி டொனால்டு டிரம்புக்கே வாக்களிக்கவும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இவை இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இதற்கு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement