For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”பிரபாஸுக்கு இதலாம் ஒரு விஷயமே இல்ல” -அமிதாப் பச்சன்!

09:15 PM Jul 17, 2024 IST | Web Editor
”பிரபாஸுக்கு இதலாம் ஒரு விஷயமே இல்ல”  அமிதாப் பச்சன்
Advertisement

பிரபாஸுக்கு ரூ. 1000 கோடி என்பது பெரிய விஷயமாக இருக்க முடியாது என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.  

Advertisement

நாக் அஸ்வின் இயக்கிய படம் 'கல்கி 2898 கி.பி'. பாக்ஸ் ஆபிஸில் வசூல் புயலை உருவாக்கியுள்ளது. ஏற்றத் தாழ்வுகள் இருந்தபோதிலும் இப்படம் அமோக வியாபாரம் செய்து வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி,  கல்கி படம் டிக்கெட் ரூ 1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், இந்த சாதனை குறித்து அமிதாப் பச்சன் ஒரு சிறப்பு செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், படம் ரூ.1000 கோடியை தாண்டியுள்ளது. நாக் அஸ்வின் தன்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ததற்கு நன்றி.

பிரபாஸுக்கு ரூ. 1000 கோடி என்பது பெரிய விஷயமாக இருக்க முடியாது. ஏனெனில் அவரது படம் ஏற்கனவே இந்த எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. ஆனால் இது அவர்களுக்கு பெரிய விஷயம்.  கல்கி படத்தை நான்கு முறை பார்த்தேன். இந்த படம் வசூல் ரீதியாக மேலும் வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது.

Tags :
Advertisement