For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘இதுதான் என் அப்பா’ - தந்தையின் நினைவைப் பகிர்ந்த ஸ்ரேயா ரெட்டி!

04:37 PM Jul 22, 2024 IST | Web Editor
‘இதுதான் என் அப்பா’   தந்தையின் நினைவைப் பகிர்ந்த ஸ்ரேயா ரெட்டி
Advertisement

திமிரு பட நடிகை ஸ்ரேயா ரெட்டி தனது தந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நினைவைப் பகிர்ந்துள்ளார். 

Advertisement

ஒரே படத்தில் ஓஹோ என்று புகழ்ப்பெற்று, பல வருடங்களுக்கு பின்னரும் தற்போது வரை நினைவில் இருக்கும் நடிகை தான் ஸ்ரேயா ரெட்டி. விஷாலின் திமிரு படத்தில் கதாநாயகன், கதாநாயகியைவிட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதிகம் பேசப்பட்டவர் தான் நடிகை ஸ்ரேயா ரெட்டி. அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் விஷாலின் அண்ணனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார், தமிழில் நாயகியை மையப்படுத்தி வெளியான அண்டாவ காணோம்,  தலைமைச் செயலகம் என்கிற வெப் சீரிஸ் போன்றவற்றில் நடித்துள்ளார். திறமைக்கு பஞ்சமே இல்லாத ஸ்ரேயா ரெட்டி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அப்படத்தில், 1979 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் மோதிய டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஐயன் போதமை, இந்திய விக்கெட் கீப்பர் பரத் ரெட்டி ரன் அவுட் செய்வார். அதனைப் பார்த்த, கேப்டன் கபில் தேவ் உற்சாகத்தில் குதிப்பார்.

இதில், பரத் ரெட்டியைக் குறிப்பிட்டு "இது என் தந்தை" என ஸ்ரேயா ரெட்டி தன் நினைவைப் பகிர்ந்துள்ளார். விக்கெட் கீர்ப்பரான பரத் ரெட்டி 1978 - 1981 வரை 3 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

Tags :
Advertisement