For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இது தான் என்னோட ஆசை"... ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பதிரானா பதிவு!

10:05 AM May 07, 2024 IST | Web Editor
 இது தான் என்னோட ஆசை     ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பதிரானா பதிவு
Advertisement

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்தது விலகிய பதிரானா,  பதிவு ஒன்றை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

17-வது ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியும்,  5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.  சிஎஸ்கே அணிக்காக இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரானா விளையாடி வந்தார்.  இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.  சிகிச்சை பெறுவதற்காக அவர் இலங்கை சென்றுள்ளார்.  இந்த நிலையில்,  இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள பதிரானா கூறியதாவது,

“விரைவில் சிஎஸ்கே-வின் அறையில் ஐபிஎல் 2024 சாம்பியன் கோப்பையை காண வேண்டும் என்ற எனது ஒரே ஆசையுடன் விடைபெறுகிறேன்! ஆசீர்வாதங்களையும், அன்பையும் பொழிந்த சிஎஸ்கே அணிக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement