Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்த ஐடியா நல்லாருக்கே... கிரிக்கெட்டை மையமாக கொண்ட கதையை இயக்குகிறாரா ஜேசன் சஞ்சய்?

03:31 PM Mar 28, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கிரிக்கெட்டை மையமாக கொண்ட கதையை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

தமிழ் நடிகர்களுள் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அரசியலில் இறங்கியுள்ளார்.  தான் ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்துவிட்டு பின் முழு அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.  விஜய் அரசியல் பயணத்தை அறிவித்ததிலிருந்து சஞ்சய் எப்பொழுது வருவார் என எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளன. ஆனால் முன்னதாகவே விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்றும்,  அவர் இயக்குநராகதான் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இந்நிலையில் யார் அவர் படத்தின் நடிகர், என்ன கதைக்கரு என எந்த தகவல்களும் வெளிவரவில்லை.

இவரின் படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன்,  துருவ் விக்ரம்,  விஜய் சேதுபதி என பலர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.  இந்நிலையில் சஞ்சய் இயக்கும் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கிரிக்கெட்டை மையமாக கொண்ட கதையை சஞ்சய் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  தமிழில் கிரிக்கெட் மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்துள்ளன.  ஆனால் இவரின் படம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.  ஆனால்,  இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை.

Tags :
actorCricketdirectorJason SanjayLyca Productionsvijay
Advertisement
Next Article