For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

" எனக்குள் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது " - நந்தன் இசை வெளியீட்டு விழாவில் #Seeman பேச்சு!

09:48 PM Sep 13, 2024 IST | Web Editor
  எனக்குள் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது     நந்தன் இசை வெளியீட்டு விழாவில்  seeman பேச்சு
Advertisement

எனக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது இப்படம் என நந்தன் இசை வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார்.

Advertisement

ரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நந்தன்'. இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘இரா’ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் அ.வினோத் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரகனி கூறியதாவது :

"முதல் இரண்டு திரைப்படங்களில், ரா. சரவணனுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அதை இந்தப் படம் நிவர்த்தி செய்யும். இந்த படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமே என்ற தவிப்பு என்னிடம் இருந்தது. இந்த திரைப்படம், இது சின்ன மாற்றத்தை ஏற்படுத்தினாலும், படத்தின் மிகப்பெரிய வெற்றி தான். இந்த திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : England -ல் இந்திய உணவகத்தின் மேலாளர் கொலை வழக்கு – குற்றவாளிக்கு அக்.10ல் தண்டனை!

நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியதாவது :

இந்த நிகழ்ச்சியை இசை வெளியீட்டு விழாவாகப் பார்ப்பதை விடப் பல நூறு ஆண்டுகளாக இந்த மண்ணின் மக்கள் பட்ட வலியை வெளிப்படுத்தும் விழாவாகவே பார்க்கிறேன். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் கனமாகவும் கவனமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது இப்படம். இந்தப் படத்தில் முதல் காட்சியிலிருந்தே என் தம்பி சசியை மறந்துவிடுவீர்கள். கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

புதுமுக நடிகையாக அறிமுகமாயிக்குக்கும் ஸ்ருதி தன்னுடைய சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். புதுமுக நடிகை என்றே சொல்ல முடியாது அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். சமுத்திரக்கனியும், பாலாஜி சக்திவேலும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சமுத்திரக்கனியின் கேரக்டர் என்னைப் பொறாமைப்பட வைத்தது அந்தக் கேரக்டரரை எனக்குக் கொடுத்திருக்கக்கூடாதா என்று சரவணனை நான் திட்டினேன்.

அந்தக் கதாபாத்திரம் என்னைத்தான் காட்டுகிறது. என் கதாபாத்திரத்தில்தான் அவர் நடித்திருக்கிறார். படத்தின் கதை தற்காலத்திலும் நம்மைப் போன்ற சகமனிதர்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கதைக்களமாகக் கொண்டிருக்கிறது. துணிந்து இப்படத்தை என் தம்பி இரா.சரவணன் எடுத்திருக்கிறார். அனைவரும் இணைந்து ஒரு காவியத்தைப் படைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement