Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருவொற்றியூர் உணவகத்தில் சிக்கனுக்கு கொடுத்த மயோனைஸில்லில் புழு! வாடிக்கையாளருக்கு வாந்தி மயக்கம்!!

09:24 AM Nov 25, 2023 IST | Web Editor
Advertisement
சென்னை திருவொற்றியூரில் மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் துருக்கி கபாப் உணவகத்தில் வாங்கப்பட்ட பாபி கியூப் சிக்கனுக்கு கொடுக்கப்பட்ட  மயோனெய்சில் புழு மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  மேலும்  மயோனெய்சில் சிக்கன் தொட்டு சாப்பிட்டததால்  வாடிக்கையாளருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

சென்னை திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த மதன்,  குபேந்திரன் இருவரும் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் மார்கெட் அருகே உள்ள துருக்கி  கபாப் உணவகத்திற்கு சென்றுள்ளனர்.  அங்கு 200 ரூபாய் பணம் கொடுத்து  பாபி கியூப் சிக்கன் பார்சல் வாங்கி வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  வீட்டிற்குச் சென்று பாபி கியூப் சிக்கனை பிரித்து மயோனெய்சில்  தொட்டு சாப்பிட்டு உள்ளனர்.  மயோனெய்சில்  புழு மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்து மதன் மற்றும் அவரது நண்பர் குபேந்திரன்  இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  பாபி கியூப் சிக்கனை மயோனெய்சில்  தொட்டு சாப்பிட்ட மதனுக்கு வாந்தி  தலை சுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மதன் மற்றும் அவரது நண்பர் குபேந்திரன் இருவரும் துருக்கி கபாப் கடைக்கு சென்று மயோனெய்சில்  புழு மேய்ந்து  கொண்டிருப்பதை  காண்பித்துள்ளனர். உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு கொண்டு இருப்பதால் இருவரையும் ஊழியர்கள்  வெளியே அழைத்து வந்து பேசியதோடு, மயோனெய்சில்  புழு  தெரியாமல் வந்து இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மயோனெய்சில்  புழு  இருந்தை தெரிந்தும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது.  இதனை அடுத்து ஆன்லைன் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு மதன் புகார் அளித்தார்.  உணவு பாதுகாப்பு துறைக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மதன் தெரிவித்தார்.
சௌம்யா.மோ
Tags :
#thiruvotriyurமயோனெய்ஸ்உணவு பாதுகாப்புத் துறைதுருக்கி கபாப்திருவொற்றியூர்புழுசென்னைChennaiFood Safety Departmentmayonaiseturkey kebabworm
Advertisement
Next Article