Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க விரைவாக செயல்பட வேண்டும்" - #EPS வலியுறுத்தல்

11:28 AM Dec 02, 2024 IST | Web Editor
Advertisement

அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு திருவண்ணாமலை நிலச்சரிவு சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நேற்று (டிச.1) மாலை நடைபெற்ற நிலச்சரிவால் இரு வீடுகளில் இருந்த 7 பேர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நள்ளிரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த நிலச்சரிவு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டு 18 மணி நேரம் ஆகியும் மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன.

அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் பூரண நலத்துடன் மீட்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்"

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article