Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பரங்குன்றம் விவகாரம் - இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
12:53 PM Dec 12, 2025 IST | Web Editor
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Advertisement

திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இதில் இந்து அமைப்புகளை சேர்ந்த ராம ரவிக்குமார், சோலைக்கண்ணன் சார்பில் வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோர் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் சில மனுக்களும் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுத்துள்ளனர். மேலும் உண்மையிலேயே பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அமைதியாக இருங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் தான் அனுமதி வழங்க வேண்டும். தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்திற்கு அருகே தர்கா உள்ளது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் நடைமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் இல்லை. அதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே 73 ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அப்போது எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் 1994-ல் இருந்து பிரச்சினை ஏற்பட்டதால் தீபம் ஏற்றுவது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 2014-ம் ஆண்டு விரிவான தீர்ப்புகள் வந்துள்ளதாக வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் “திருப்பரங்குன்றம் தூண் சர்வே தூண் தானா என்று உறுதி செய்து உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் “மலை உச்சியில் உள்ளது சர்வே தூண் தான். மலையில் உள்ள நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானது என்றும் மற்றவை கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது” என்று தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

 

Tags :
judgesMadurai HighcourtpetitionsThiruparankundram caseThiruparankundram HillTN Govt
Advertisement
Next Article