For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருமுருகநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

05:20 PM Feb 18, 2024 IST | Web Editor
திருமுருகநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Advertisement

திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

Advertisement

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட சாமியின் கொடியை எடுத்து கோயிலுக்குள் பிரகார உலாவந்து வேத மந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றப்பட்டது.

இதையும் படியுங்கள் : "தொகுதி பங்கீடு விவகாரம் : எந்த முடிவு எடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்" - காங். எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

உற்சவ மூர்த்திகள் பிரகார உலா, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றது. பிப்ரவரி 19 ஆம் தேதி மாலையில், சூரிய, சந்திர மண்டலக்காட்சிகள், 20 ஆம் தேதி பூதவாகன, சிம்ம வாகனக்காட்சிகள், 21 ஆம் தேதி புஷ்ப வாகனக் காட்சிகளும், 22 ஆம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனக்காட்சிகளும், 23 ஆம்தேதி யானை வாகன, அன்னவாகன காட்சிகளும், சாமி திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இதையடுத்து,  திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் தேரோட்டம் நிகழ்ச்சி 24 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது. 26ஆம் தேதி தெப்பத்தேர் உற்சவம் நிகழ்ச்சியும், 27ஆம் தேதி ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா நடைபெறுகிறது. 28 ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 29 ஆம் தேதி மஞ்சள் நீர் திருவிழா, மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் தேர்த் திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement