For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

01:32 PM Oct 20, 2024 IST | Web Editor
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் ஏராளமானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

Advertisement

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. மேலும் கடற்கரையில் அமைந்துள்ளதால் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

அதிலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் ஏராளமானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு வழங்கப்படும் நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும். இலை விபூதி பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இங்கு சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கிறது. தற்போது ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா நடைபெற உள்ள நிலையில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விடுமுறையை கொண்டாட ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

வழக்கம் போல் இன்று கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். Tags:

Advertisement