Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Thiruchendur | கந்த சஷ்டி விழா - 18 ஆண்டுகளுக்கு பிறகு வைர வேலுடன் காட்சியளித்த ஜெயந்திநாதர்!

07:44 AM Nov 06, 2024 IST | Web Editor
Advertisement

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயந்திநாதர் கையில் வைர வேலுடன் காட்சியளித்தார்.

Advertisement

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலில் ஆவணி திருவிழா, மாசித் திருவிழா, கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா என பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில், மிக முக்கியமானதாக கந்த சஷ்டி விழா கருதப்படுகிறது.

கந்த சஷ்டி விழா கடந்த 2 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் விமர்சையாக தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து நாளை ( நவ.7ம் தேதி) விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில், நான்காம் நாளான நேற்று யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. அதன் பின்னர் அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து சுவாமி மற்றும் வள்ளி தெய்வானைக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயந்தி நாதருக்கு இரண்டு அடி உயரமுள்ள வைரவேல் சார்த்தப்பட்டது.

இதையும் படியுங்கள் : ProKabaddiLeague | தபாங் டெல்லி அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி!

பின்னர், சண்முக விலாச மண்டபத்திற்கு ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை தங்க சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வருகை தந்தனர். அங்கு தீபாராதனை நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags :
DevotionkandasashtimurugantempleNews7Tamilnews7TamilUpdatestiruchendur
Advertisement
Next Article