Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#America -வில் நிறுவப்பட்ட பிரமாண்ட அனுமன் சிலை! சிலைக்கு பேரு என்ன தெரியுமா?

08:42 AM Aug 23, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 90 அடி உயரம் கொண்ட அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

'ஒன்றிணைப்பு சிலை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள மிக உயரமான அனுமன் சிலை மற்றும் அமெரிக்காவில் மூன்றாவது உயரமான சிலை ஆகும்.

நியுயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை (151 அடி) மற்றும் புளோரிடாவின் ஹாலண்டேல் கடற்கரையில் உள்ள பெகாசஸ் மற்றும் டிராகன் சிலை (110 அடி) ஆகியவை அமெரிக்காவின் முதல் 2 உயரமான சிலைகள் ஆகும். டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இருக்கும் சுகர் லேண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயில் வளாகத்தில் இந்தப் பிரம்மாண்ட அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ஹைதராபாத்தில் அதிக லைக்குகள் பெற சாலைகளில் ரூபாய் நோட்டுகளை வீசிய #youtuber – ஆல் பரபரப்பு!

கடந்த 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதிவரை நடைபெற்ற 'பிராண பிரதிஷ்டை' நிகழ்வில் ஹெலிகாப்டர் மூலம் சிலைக்கு மலர் தூவி, புனித நீர் தெளித்து, 72 அடி நீள மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீராமர் மற்றும் அனுமன் நாமங்களை பக்தியோடு கோஷங்களை எழுப்பினர்.

Tags :
Americabronze statueHanuman StatueNew York
Advertisement
Next Article