For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"#Kanimozhi எம்.பி. உதவியாளர் யார் என்றே தெரியாது" - மதுபோதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் மன்னிப்பு கோரி வாக்குமூலம்!

10:12 AM Oct 03, 2024 IST | Web Editor
  kanimozhi எம் பி  உதவியாளர் யார் என்றே தெரியாது    மதுபோதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் மன்னிப்பு கோரி வாக்குமூலம்
Advertisement

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக காணொலி வெளியிட்டு மன்னிப்புக் கோரி உள்ளனர்.

Advertisement

கோவையில் கடந்த 1-ம் தேதி இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மது போதையில் பிடிபட்ட இளைஞர் ஒருவர், போக்குவரத்து காவலர்களிடம் நான் கனிமொழி எம்.பி. உதவியாளரின் தம்பி என்று கூறியுள்ளார். இது தொடர்பான காணொலி வெளியாகி வைரலானது. இதனையடுத்து, அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக கனிமொழி உதவியாளரின் தம்பி என தவறான தகவலை கூறியது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கனிமொழி எம்.பி பெயரை பொதுவெளியில் தவறாக பயன்படுத்தி காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : “என் சொந்த விஷயம்.. எனது விவாகரத்தில் எந்த அரசியல் சதியும் இல்லை..” – தெலங்கானா அமைச்சர் கருத்துக்கு நடிகை #Samantha பதில்!

இது தொடர்பாக காணொலி வெளியிட்டு அந்த இளைஞர்கள் மன்னிப்பு கேட்டு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதில் அந்த இளைஞர் கூறியதாவது,

“பொள்ளாச்சியிலிருந்து கோவை சென்று திரும்பியபோது, காவல்துறையினர் சோதனையில் பிடிபட்டோம். அப்போது மது போதையில் தவறான வார்த்தைகளை பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பொது இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பெயரை கூறியது தவறு, அவரின் உதவியாளர் யார் என்றே தெரியாது. பொது இடத்தில் தவறாக நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
Advertisement