"வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதிக்கிறார்கள்" - சீமான் பேட்டி!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"நீட் தேர்வு முறை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. இதுவரை அதற்கு பதில் கிடைக்கவில்லை. பயிற்சி மையங்கள் சம்பாதிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வை அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்தி கொண்டிருக்கிறது.
நமது நாட்டினரால் நடத்த முடியாதா? ஒரு மாணவனை தேர்வு செய்யும் தேர்வு நடத்த முடியாதவர்களால் நாட்டிற்கான தலைவரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்? வசதி படைத்த மாணவன் மருத்துவன் ஆகலாம், கிராமப்புறங்களில் கஷ்டப்படும் ஒரு மாணவனுக்கு மருத்துவ கனவு வரக்கூடாதா?
தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் ஏன். வடமாநிலங்களில் புத்தகத்தை திறந்து வைத்து நீட் தேர்வு எழுதுகிறார்கள். என்னிடம் ஆதாரம் உள்ளது. மூக்குத்தி, பட்டன், தோடு ஆகியவற்றில் பிட் எடுத்து செல்ல முடியுமா?
மற்ற மாநிலங்களில் இல்லாத கெடுபிடி தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் ஏன் உள்ளது? சோதனை என்ற பெயரில் வதை செய்தால் மாணவர்கள் எப்படி தேர்வெழுதும் மனநிலைக்கு வருவர். அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என்று கூறிய திமுக இதுவரை என்ன செய்துள்ளது"? என கேள்வி எழுப்பினார்.