மீண்டும் வருகிறார் தேவரா - போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு..!
தெலுங்கி முண்ணனி நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் தேவரா. இயக்குநர் கொரட்டலா சிவா இயக்க்கிய இப்படத்தில் சயஃப் அலிகான், பிரகாஷ் ராஜ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தி நடித்திருந்தனர். மேலும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கப்பூர் இப்படத்தின் மூலம் தென்னிந்திய திரை உலகில் அறிமுகமானார்.
தெலுங்கு தமிழ்,ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்தார். படம் கலவையான விமர்சங்களை பெற்றிருந்தாலும் உலகலவில் 500 கோடிக்கும் மேல் வசூலித்து மிரட்டியது. மேலும் படத்தின் இறுதியில் 2ஆம் பாகத்திற்கான லீட் கொடுத்து முடித்திருந்தனர்.
இந்நிலையில், தேவரா படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தேவரா 2 படத்தின் அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.