Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கீழமைக்கேல்பட்டி அருகே கிறிஸ்தவர்கள், இந்துகள் சேர்ந்து கொண்டாடிய தேர்பவனி!

11:38 AM May 16, 2024 IST | Web Editor
Advertisement

கீழமைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பர் ஆலய தேர் பவனி விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

Advertisement

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழ மைக்கேல்பட்டியில் பிரசித்தி பெற்ற
புனித வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளது.  இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து,  தினசரி திருப்பலி,  நவநாள் திருப்பலி,  தவ நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  ஆடம்பர தேர்பவனியை குடந்தை,  முன்னாள் ஆயர் அந்தோணிசாமி,  குடந்தை மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

சிறப்பாக தயார் செய்யப்பட்ட சப்பரத்தில் புனித வனத்து சின்னப்பர், ஆரோக்கிய
அன்னை மற்றும் சம்மனசு ஆகியோர் எழுந்தருளினர்.இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு புனித வனத்து சின்னப்பருக்கு
மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

இதையும் படியுங்கள் : “விஜயகாந்த் மாதிரி ஒருவரை பார்க்கவே முடியாது” - நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

இந்நிலையில்,  இந்த திருவிழாவில் கிறிஸ்தவர்களோடு இந்துக்கள் கலந்துகொண்டு புனித வனத்து சின்னப்பருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.  பின்னர் வாணவேடிக்கை மற்றும் பேண்டு வாத்தியம் முழங்க திருத்தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு,  தா.பழூர் செல்லும் சாலை வழியாக கீழ மைக்கேல் பட்டி புனித மைக்கேல் அதிதூதர் ஆலய வாயிலை சென்றடைந்தது.  விழாவுக்கான ஏற்பாடுகளை கீழமைக்கேல்பட்டி பங்கு தந்தை அடைக்கலசாமி, ஊர் நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.

Tags :
AriyalurChristianshindusKeemaikeelpattiTherpavaniworship
Advertisement
Next Article