”பாலஸ்தீனம் என்னும் நாடு ஒருபோதும் அமையாது” - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு பேச்சு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 2023 முதல் போர் நடைபெற்று வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இதுவையில் சுமார் 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனவே போர் நிறுத்தம் குறித்து சர்வதேச அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ஒரு புதிய யூத குடியிருப்பை அமைக்கும் விழா நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு,
இனி ஒருபோதும் பாலஸ்தீனம் என்னும் நாடு அமையாது. இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. பாலஸ்தீன நாடு இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற போகிறோம். நாங்கள் எங்கள் பாரம்பரியம், எங்கள் நிலம் மற்றும் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என்று பேசினார்.
இஸ்ரேல் பிரதமரின் இந்த பேச்சு உலக அலவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.