"ஏடிஎம்களில் பணம் எடுத்தால் இனி கூடுதல் கட்டணம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"மத்திய அரசு அனைவரும் வங்கிக் கணக்கை திறக்க வலியுறுத்தியது. பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தது டிஜிட்டல் இந்தியாவை முன்னிலைப் படுத்தியது.
அதைத் தொடர்ந்து என்ன நடந்தது? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், குறைந்த இருப்புக்கான அபராதம், இப்போது வங்கிகள் மாத வரம்பிற்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு ரூ. 23 வரை கட்டணம் வசூலிக்க ரிசர்வு வங்கி அனுமதி அளித்துள்ளது. இது மக்கள் தங்களுக்குத் தேவையானதை விட அதிகமாக பணம் எடுக்க வழிவகை செய்யும். குறிப்பாக, ஏழைகளின் நிதி சேமிப்பை குறைக்கும் நோக்கமாகும்.
ஏற்கனவே நிதி இல்லாமல் தவிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் மற்றும் எங்கள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 பணப் பரிமாற்றங்களால் பயனடையும் ஏழைகள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. இது நிறுவனமயமாக்கப்பட்ட ஏழைகளின் பணத்தை துடைத்து எடுத்து பணக்காரர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் திட்டம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.