Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செஞ்சியில் நாதக கூட்டத்தில் சலசலப்பு - மேடையில் இருந்து சட்டென்று கீழே இறங்கிய சீமான்.!

செஞ்சியில் நாதக கூட்டத்தில் சீமான் செய்தியாளர்களை நோக்கி தாக்குவது போல் வேகமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
10:12 PM Aug 17, 2025 IST | Web Editor
செஞ்சியில் நாதக கூட்டத்தில் சீமான் செய்தியாளர்களை நோக்கி தாக்குவது போல் வேகமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement

யுனஸ்கோ நிறுவனமானது, கடந்த 11-ந் தேதி செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பில் செஞ்சிகோட்டையானது மராட்டியர்களால் கட்டப்பட்டது என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கண்டித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு தமிழ் நாட்டு தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

Advertisement

இதனை அடுத்து பல்வேறு தரப்பினர் செஞ்சி கோட்டையை தமிழர்களின் பாரம்பரியமான கோட்டை என மராட்டிய மன்னருக்கு சொந்தமான கோட்டை இல்லை என்று பல்வேறு போராட்டங்களை அறிவித்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சி ஆனந்த கோணுக்கு சொந்தமான கோட்டை என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையேற்று பேசினார். இந்த அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து செய்தியாளர்கள் அவருடன் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை பாதுகாவலர்கள் மறுத்துள்ளனர்.  இந்த நிலையில் மேடையில் இருந்து  கீழே இறங்கிய சீமான் செய்தியாளர்களை நோக்கி தாக்குவது போல் வேகமாக வந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த செஞ்சி காவலர்கள் செய்தியாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். கூட்டத்தில் ஏற்படுகின்ற பிரச்சினையை சமாதான பேச்சு வார்த்தை ஈடுபடாமல் கட்சித் தலைவரே மேடையில் இருந்து தாக்க முயற்சிப்பது போல் இறங்கி வந்த காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
GingeeFortlatestNewsNTKSeemanTNnewsVillupuram
Advertisement
Next Article