For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி இல்லை” - தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பேட்டி!

06:05 PM Jan 20, 2024 IST | Web Editor
“கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி இல்லை”   தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பேட்டி
Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதையே இட வசதி ஏற்படுத்திய பின்னரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை மாற்றுவோம் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

படிப்படியாக அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜனவரி 24-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து துறையின் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர் கூறியதாவது,

“ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து புதிய நிலையத்தில் நிறுத்தி போதிய இட வசதி இல்லை. அங்கு பணிகளும் முழுமையாக முடிவடையவில்லை. பணிகள் முடிந்து ஆம்னி பேருந்து ஏற்ற வசதி ஏற்படுத்தி தந்தால் பேருந்துகளை கிளாம்பாக்கதிற்கு மாற்றுவோம். சேலம் இளைஞர் மாநாட்டிற்கு ஆம்னி பேருந்துகள் கட்டாயம் வர வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை..

எனவே கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும். கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் வரும் வரை இதே நிலை இருக்கும். ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளை 24 ஆம் தேதியே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு
மாற்றவேண்டும் என்பது முடியாத ஒரு காரணம். அரசு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதையே இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். பின்னரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை மாற்றுவோம்” என தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement