For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை’ - சுகாதாரத் துறை இயக்குநர்!

09:34 AM Jul 04, 2024 IST | Web Editor
‘தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை’    சுகாதாரத் துறை இயக்குநர்
Advertisement

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவிவரும் நிலையில், தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு எதும் இல்லை என பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். 

Advertisement

மகாராஷ்டிராவில் ஏடிஸ் வகை கொசு வாயிலாக ஏற்படும் ஜிகா வைரஸ் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஜிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்கும் படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை என பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;

“கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் டெங்கு, ஜிகா, சிக்குன் குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார களப்பணியாளர்களை, கொசு ஒழிப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஜிகா பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை. எனவே, அச்சப்பட வேண்டாம்.மற்றொருபுறம் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன.

மழைப் பொழிவுக்குப் பிறகு சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீர் போன்றவற்றை கொசுக்கள் உற்பதியாகக்கூடும்.

அதனால், அந்த பொருள்களை உடனடியாக அகற்ற வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் சுத்தமான தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Tags :
Advertisement