அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை - பாமக நிறுவனர் ராமதாஸ்!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதிப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜிகே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமைநிலைய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "ஒரு காலத்தில் ஒருவர் கூட படிக்காத சமுதாயமாக வன்னியர் சமுதாயம் இருந்தது. இன்றைக்கு ஐந்தாயிரம் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ள நிலையில் எல்லோரும் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள், வன்னியர் சமுதாயம் மட்டுமல்ல, 115 சமுதாயத்திலும் உருவாகியுள்ளதாக கூறினார். சமூக நீதி என்றால் இந்திய அளவில் பேசக்கூடியவர் என்னைத் தவிர யாரும் கிடையாது சிலரால் கூட்டத்திற்கு வர முடியவில்லை, நீதித்துறையில் இடஒதுக்கீடு வேண்டும் நீதிமன்றத்தில் சமூகநீதி இல்லை என தெரிவித்தார்.
தைலாபுரம் கூட்டத்திற்கு அன்புமணி வருவார், கலந்துக்கொள்வார் எங்களுக்குள் மனக்கசப்பு இல்லை இனிப்பான செய்திகளை தான் இதுவரை சொல்லியுள்ளேன். இனிப்பான செய்திகளை சொல்லுவேன் மருத்துவர் என்பதால் கசப்பான மருந்துகளை கூட நான் தருவதில்லை என கூறினார். சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் அதன் சீற்றம் குறையாது அதனால் தான் நீச்சல் குளத்தில் குளித்த வீடியோ வெளியிடப்பட்டது என தெரிவித்துள்ளார். மேலும் அன்புமணி ராமதாசை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளிவந்தன. அதை நான் செய்வேனா என கூட்டத்தில் நிர்வாகிகளிடம் ராமதாஸ் கூறியுள்ளார்.